Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உகண்டாவில் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல்: 55 பேர் உயிரிழப்பு

In
Updated: 05:18 GMT, Nov 28, 2016 | Published: 05:18 GMT, Nov 28, 2016 |
0 Comments
1203
This post was written by : Sambavi

உகாண்டாவில் அரச படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்கு உகாண்டாவில் உள்ள காசேஸ் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அரச படைகளுக்கும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று திடீர் மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினருக்கும் இடயே ஏற்பட்ட துப்பாக்கி சமர் பல மணி நேரம் நீடித்துள்ளது. இந்த நிலையில், மோதலின் முடிவில் அரச படையை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டதுடன், பயங்கரவாதிகள் தரப்பில் 41 பேர் கொல்லப்பட்டனர்.

இதேவேளை, குறித்த மோதலில் 55 பேர் கொல்லப்பட்டதை உயர் பொலிஸ் அதிகாரி பெலிக்ஸ் கவேசி உறுதி செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg