Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு காஷ்மீர் ஹான்ட்வரா பகுதியில் தீவிர துப்பாக்கிச் சண்டை

In இந்தியா
Published: 05:44 GMT, Nov 28, 2016 |
0 Comments
1208
This post was written by : Elakkiya

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்துக்குட்பட்ட ஹான்ட்வரா பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் தீவிர துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் லான்கேட் என்ற பகுதியில் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சண்டை இடம்பெற்று வருகின்றது.

நேற்று இரவே குறித்த பகுதிகளை சுற்றுவளைத்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இன்று மோதலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழப்பு விபரங்கள் எவையும் தெரியவரவில்லை.

படையினரின் தாக்குதல்களுக்கு தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்துவதால் இருதரப்பினருக்கு இடையிலும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg