Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஃபிடெல் காஸ்ரோ எனக்கு இரண்டாவது தந்தை: மரடோனா உருக்கம்

In உதைப்பந்தாட்டம்
Updated: 10:10 GMT, Nov 28, 2016 | Published: 06:22 GMT, Nov 28, 2016 |
0 Comments
1252
This post was written by : Anojkiyan

கியூபாவின் புரட்சியாளரும், முன்னாள் ஜனாதிபதியும், கியூபாவின் நீண்ட கால ஆட்சியாளர் என்ற கௌரவத்தை தன்னகத்தே கொண்டவருமான ஃபிடெல் காஸ்ரோவின் மறைவிற்க்கு, அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் தலைவரான மரடோனா, இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 1986ஆம் நடந்த கால்பந்து உலகக்கிண்ண தொடரில் அர்ஜென்டினா சம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மரடோனா.

போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையான இவர், கியூபா புரட்சி நாயகன் ஃபிடெல் காஸ்ரோவுடன் நட்பை ஏற்படுத்திய பின் அதிலிருந்து மீண்டார். இதனால் அவர் காஸ்ரோ படத்தை தனது உடலில் பச்சை குத்திக்கொண்டார்.

இந்நிலையில், ஃபிடெல்  காஸ்ரோவின் மறைவினால் நிலைகுலைந்துள்ள மரடோனா, இரங்கல் செய்தியொன்றினை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடபட்டுள்ளதாவது,

போதை மருந்து பழக்கத்திற்கான சிகிச்சையை கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோ ஏற்படுத்தி தந்தார். அங்கு 4 ஆண்டுகள் தங்கியிருந்தேன். உங்கள் முன்னால் நான் நிற்பதற்கு  காஸ்ட்ரோதான்  காரணம். ‘உன்னால் எல்லாமே முடியும், எனக்கூறி ஊக்கம் தந்தார். இந்த நினைவுகளை மறக்கவே முடியாது. எனது இரண்டாவது தந்தை போன்றவர். நான் உயிருடன் இருப்பதற்கு இவர் தான் முக்கிய காரணம். என குறிப்பிடபட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg