Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நபா சிறைச்சாலையின் அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்

In இந்தியா
Updated: 13:31 GMT, Nov 28, 2016 | Published: 06:07 GMT, Nov 28, 2016 |
0 Comments
1251
This post was written by : Elakkiya

பஞ்சாப் மாநிலம் நபாவில் மத்திய சிறைச்சாலை உடைக்கப்பட்டு காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டு தப்பிச் சென்ற சம்பவத்தின் எதிரொலியாக நபா சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இத குறித்து பஞ்சாப் மாநில துணை அமைச்சர் சுக்பீர் சிங் படல், ‘ நபா சிறைச்சாலையின் பொது இயக்குனரை பணி இடைநீக்கம் செய்துள்ளோம். அத்துடன், சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோரை பணிநீக்கம் செய்துள்ளோம். பொலிஸ் மேலதிக பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக விசேட அதிரடிப்படை அமைக்கப்படுகின்றது.’ என்று தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சிறைச்சாலை உடைப்பு சம்பவத்தில் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங்குடன் மேலும் ஐந்து கைதிகள் தப்பிச் சென்றனர்.

தீவிரவாதத்துடன் தொடர்புடைய சுமார் பத்து வழக்குகளின் பிரகாரம் ஹர்மீந்தர் சிங் கடந்த 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தாய்லாந்திலிருந்து டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தபோது இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சூத்திரதாரி பர்மிந்தர் இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரப்பிரதேஷ் மாநிலத்தின் ஷாம்லி நகரத்தில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg