Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கியூப தலைவர் மறைவு: ஜப்பான் மற்றும் வடகொரியா இரங்கல்

In
Updated: 06:27 GMT, Nov 28, 2016 | Published: 06:26 GMT, Nov 28, 2016 |
0 Comments
1231
This post was written by : Sambavi

கியூப முன்னாள் தலைவர் ஃபிடேல் காஸ்ரோவின் மறைவிற்கு பல உலகத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில் ஜப்பான் மற்றும் வடகொரிய தலைவர்கள் தமது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு புரட்சித் தலைவர் ஃபிடேல் காஸ்ரோ காலமானார். இந்த நிலையில், செய்தி வெளியான அடுத்த கணத்தில் இருந்தே உலகத் தலைவர்கள் தமது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த தலைவருக்கான தமது இரங்கலை இன்று வெளியிட்டுள்ள ஜப்பான் தொடர்ந்தும் கரீபியன் தீவுகளின் ஒன்றான கியூபாவுடன் நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜப்பானிய அமைச்சரவைத் துணை தலைமைச் செயலாளர் Koichi Hagiuda வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முன்னாள் தலைவர் காஸ்ரோவின் மரணம் தொடர்பில் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை கியூபாவிற்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஜப்பான் மற்றும் கியூபா உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றன. அதேவேளை, இரு நாட்டு மக்களும் கூட நல்லுறவைப் பேணுவதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். கியூபாவின் முன்னாள் தலைவரின் இழப்பின் பின்னரும் கூட அதேபோன்ற உறவுகள் இரு நாடுகளிற்கும் இடையில் தொடர்ந்தும் கட்டியெழுப்படும் என்று நாங்கள் கருதுகின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கியூபாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன், இருநாட்டு வர்த்தக உறவுகளை கட்டியெழுப்புதல் தொடர்பில் இணக்கப்பாடுகளை எட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கியூப தலைவரின் மறைவிற்கு வடகொரிய ஜனாதிபதி கிம் யொங் உன் தமது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார். மறைந்த புரட்சித் தலைவரின் சகோதரர் மற்றும் கியூப ஜனாதிபதி ஃபிடேல் காஸ்ரோவிற்கு தமது இரங்கல் செய்தியை வடகொரிய ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளதாக அந்த நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg