Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வல்லப்பட்டைகளை கடத்த முற்பட்ட இருவருக்கு அபராதம்

In இலங்கை
Updated: 06:28 GMT, Nov 28, 2016 | Published: 06:25 GMT, Nov 28, 2016 |
0 Comments
1221
This post was written by : Varshini

இலங்கையிலிருந்து டுபாய்க்கு வல்லப்பட்டைகளை கடத்திச் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட இருவருக்கு 3 இலட்சம் ரூபா அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கடத்த முற்பட்ட 48 கிலோகிராம் வல்லப்பட்டையும் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு தெஹிவளையைச் சேர்ந்த பெண் ஒருவரும் குளியாப்பிட்டியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் சேர்ந்து, இன்று (திங்கட்கிழமை) குறித்த வல்லப்பட்டையை கடத்த முற்பட்டபோது சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு ஒரு இலட்சம் ரூபாவும் ஆணிற்கு இரண்டு இலட்சம் ரூபாவும் அபராதம் விதித்து சுங்கத் திணைக்களம் அவர்களை விடுவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg