Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறிய வகை குரங்குகள் திருட்டு: அவுஸ்திரேலிய வனவிலங்கு பூங்காவில் சம்பவம்

In
Updated: 07:11 GMT, Nov 28, 2016 | Published: 07:10 GMT, Nov 28, 2016 |
0 Comments
1283
This post was written by : Sambavi

அவுஸ்திரேலியாவின் வனவிலங்கு பூங்காவில் இருந்து அரிய வகையான சிறிய குரங்கினமான pygmy marmosetsயைச் சேர்ந்த மூன்று குரங்குகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Symbio வனவிலங்குப் பூங்காவில் வாழ்ந்து வந்து குறித்த pygmy marmosets களும் திருடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் குழந்தை குரங்கும் பெண் குரங்கொன்றும் அதிகாரிகளால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்கப்பட்டதாகவும் இருப்பினும் ஆண் குரங்கொன்று கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pygmy marmosets குரங்கொன்று கறுப்புச் சந்தையில் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியில் 5000 வரையும் அமெரிக்க டொலர் பெறுமதியில் 3,700 வரையும் விற்கப்படுகின்றது.

இந்த நிலையில், pygmy marmosets மூன்றையும் திருடிய 23 மற்றும் 26 வயதான இளைஞர்கள் இருவர் சந்தேகத்தில் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் marmosets வனவிலங்கு பூங்காவிற்கு 20 கிலோமீற்றர் தொலைவில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. pygmy marmosets என்பவை உலகின் மிகச்சிறிய குரங்கினம் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg