Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன நிறுவனத்தின் நிபந்தனைகள் இலங்கை அரசாங்கத்தால் நிராகரிப்பு

In இலங்கை
Updated: 06:56 GMT, Nov 28, 2016 | Published: 06:56 GMT, Nov 28, 2016 |
0 Comments
1725
This post was written by : Varshini

மத்தளை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய புனரமைப்பு தொடர்பாக, சீன நிறுவனம் முன்வைத்திருந்த நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

நட்டத்தில் இயங்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு ஏறக்குறைய தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மத்தளை விமான நிலையத்தையும் அவ்வாறு கையளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

மத்தளை விமான நிலையத்தை கையேற்கும் நிறுவனமானது, அதன் புனர்நிர்மாண பணிகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த விமான நிலையத்தை கையேற்பதற்காக சீனாவால் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை ஏற்க முடியாதென சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், புதிய நிறுவனங்களுக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சீனாவின் பாரிய நிதி பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தளை சர்வதேச விமான நிலையமானது, அதன் விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாரிய நட்டத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg