Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அலெப்போ மோதல்: இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்த பொதுமக்கள்

In உலகம்
Updated: 08:11 GMT, Nov 28, 2016 | Published: 08:10 GMT, Nov 28, 2016 |
0 Comments
1175
This post was written by : Sambavi
47b026c8-8298-4f45-9c5f-dab2ae10d524

சிரியாவில் போராளிகள் வசம் உள்ள அலெப்போவில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளை வந்தடைந்துள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

குறித்த கண்காணிப்புக் குழு நேற்று (ஞாயிழற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அலெப்போவின் கிழக்குப்பகுதியில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் கடந்த சனிக்கிழமை (19.11.2016) யில் இருந்து சிறிய சிறிய குழுக்களாக வந்தடைந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ‘அவ்வாறு மோதல் பிரதேசங்களில் இருந்து வெளியேறியவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் Sheikh Maksoud என்ற இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை சென்றடைந்துள்ளனர்’ என தெரிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் அலெப்போ நகரமானது இரண்டாவது பெரிய நகரம் என்பதுடன் 4 ஆண்டுகளாக குறித்த நகரம் தீவிரவாதிகள் வசம் வீழ்ந்திருந்தது.
இந்த நிலையில், சிரிய அரச படைகள் மேற்கிலிருந்தும், சர்வதேச ஆதரவு படைகள் கிழக்கில் இருந்தும் தீவிரவாதிகள் நெருக்குவதனால் அவர்கள் நிலைகுலைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg