Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் சிங் மீண்டும் கைது

In இந்தியா
Updated: 07:26 GMT, Nov 28, 2016 | Published: 07:20 GMT, Nov 28, 2016 |
0 Comments
1225
This post was written by : Elakkiya
harmindersinghmintoo650_1_636159210067042782

பஞ்சாப் நவா சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டு இன்று (திங்கட்கிழமை) காலை டெல்லி புகையிரத நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவா சிறைச்சாலைக்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பொலிஸ் சீருடையில் நுழைந்த சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் சிறையிலிருந்த காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டு மீட்கப்பட்டார். ஹர்மீந்தர் சிங்குடன் சேர்ந்து மேலும் ஐந்து கைதிகள் தப்பிச் சென்றனர்.

இவர்கள் தப்பிச்சென்று 24 மணிநேரத்திற்குள் ஹர்மீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டெல்லியிலுள்ள உறவினருடன் தொடர்பு கொண்ட ஹர்மீந்தர் சிங்கின் தொலைபேசி அழைப்பை பின்பற்றி நிஜஸாமுதீன் புகையிரத நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹர்மீந்தர் சிங் நேபாளத்திற்கு தப்பிச் செல்ல முயன்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தப்பியோடிய ஏனைய ஐவரையும் கைது செய்ய மாநிலம் முழுவதும் பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்துடன் தொடர்புடைய சுமார் பத்து வழக்குகளின் பிரகாரம் ஹர்மீந்தர் சிங் கடந்த 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தாய்லாந்திலிருந்து டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தபோது இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg