Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கைவிடப்பட்ட வாகனத்திலிருந்த 1000 கிலோ மரிஜூவானா போதைப் பொருள் சிக்கியது

In இந்தியா
Updated: 07:45 GMT, Nov 28, 2016 | Published: 07:44 GMT, Nov 28, 2016 |
0 Comments
1357
This post was written by : Elakkiya

மேற்கு வங்க மாநிலத்தில் கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து சுமார் 70 மில்லியன் ரூபா பெறுமதியான 1000 கிலோ கிராம் மரிஜூவானா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடகிழக்கு மணிப்பூர் மாநிலத்திலிருந்து சிலிகுரி மாவட்டத்தை நோக்கி அதிகளவிலான மரிஜூவானா போதைப்பொருள் கடத்தப்படுவதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து எல்லைப் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில், ‘ மொத்தமாக 97 பக்கெட்களை நாம் கைப்பற்றியுள்ளோம். சர்வதேச சந்தையில் ஒரு கிராமுக்கு குறைந்தது ஒரு டொலர் பெறுமதி உண்டு. வாகனம் உட்பட இதன் மொத்த பெறுமதி 7 கோடி ரூபாவாகும்.’ என தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரை தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg