Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மில்லியன் கணக்கில் ஆதரவற்ற சிறுவர்களை தோற்றுவித்த கொங்கோ : ஐ.நா. அறிக்கை

In
Updated: 09:56 GMT, Nov 28, 2016 | Published: 08:34 GMT, Nov 28, 2016 |
0 Comments
1250
This post was written by : Sambavi

கொங்கோ  ஜனநாயகக் குடியரசில் கடந்த இரண்டு தசாப்தங்களிற்கு மேலாக தொடரும் யுத்தம் காரணமாக சுமார் 4 மில்லியன் சிறுவர்கள் பெற்றோரை இழந்து ஆதரவற்றோர்களாகியுள்ளதாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொங்கோவில் தொடரும் புரட்சி காரணமாக அது அமைந்துள்ள மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் சுமார் 26 மில்லியன் சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொகையானது உலகில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் அதிகமாக வாழும் கண்டங்களில் இரண்டாவது இடத்திற்கு கொண்டு செல்வதாகவும், முதலாவது இடத்தில் தெற்காசியா காணப்படுவதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் மேலும், ‘1994ஆம் ஆண்டில் இருந்து மேலோங்கியுள்ள யுத்தம் மற்றும் வன்முறைகள் காரணமாக இவர்கள் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். அந்த நாடுகளின் பாதிக்கப்பட்ட சந்ததியாக இவர்கள் காணப்படுகின்றனர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் தமது இளைய சகோதரர்களையும் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் சிலர் ஆயுதக் குழுக்களின் கட்டாய ஆட்சேர்பினாலும், வேறு சிலர் பாலியல் சுரண்டல்கள், பாலியல் துஷ்பிரயோகங்களினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg