Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல்: வாக்குகளின் முடிவை ஏற்ற ஜுப்பேயின் ஆதரவாளர்கள்

In ஐரோப்பா
Updated: 09:27 GMT, Nov 28, 2016 | Published: 09:25 GMT, Nov 28, 2016 |
0 Comments
1244
This post was written by : Sambavi

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெற உள்ள பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலிற்கான கன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளராக பிரான்கொய்ஸ் ஃபிலோன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய வெற்றிக்கு பலமாக செயற்பட தாம் தயார் என வாக்குப்பதிவில் தோற்ற அலைன் ஜுப்பே தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்று முடிந்த வாக்கெடுப்பின் பிரகாரம் கன்சவேட்டிவ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஃபிலோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜுப்பே மிகக்குறைந்த வாக்குகளையே பெற்ற நிலையில் தோல்வியைத் தழுவினார். மேலும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் வாய்ப்பினையும் தவறவிட்டுள்ளார்.

இந்த நிலையில், முடிவுகள் வெளியானதன் பிற்பாடு கருத்துரைத்த அவர், சரியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நாம் அனைவரும் அவருக்கு (ஃபிலோன்) பின்னால் நின்று வெற்றிக்காக செயற்பட வேண்டும் என்றுள்ளார்.

இதேவேளை, இதே கருத்தினைக் கொண்ட ஜுப்பேயின் ஆதரவாளர்களும், ஃபிலோனின் வெற்றிக்காக தாம் துணை நிற்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg