Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு – கிழக்கை மீண்டும் இணைக்க இடமளியோம்: ஹிஸ்புல்லாஹ் சூளுரை

In இலங்கை
Updated: 12:34 GMT, Nov 28, 2016 | Published: 09:23 GMT, Nov 28, 2016 |
0 Comments
1632
This post was written by : hoshika

வடக்கு – கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உடன்பாடில்லை என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பு ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பின்னர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், நாட்டின் தேவை கருதி மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தம் குறித்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு சமூகத்தை பாதிக்கும் வகையில் அரசியல் தீர்வு எட்டப்படுமாயின் அது நிரந்தர தீர்வாக அமையப் போவதில்லை எனவும் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தாத வகையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அரசியலமைப்பு அமைய வேண்டும் என சுட்டிக்காட்டி இருந்தார்.

மேலும், அரசியலமைப்பு திருத்தம் வடக்கு, கிழக்கு மற்றும் அதற்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு  பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மேற்கொள்ளப்படும். மாறாக, சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திருத்தத்துக்கும் நாங்கள் இடமளிக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg