Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கியூப புரட்சியாளரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ராஜ்நாத் சிங் கியூபா பயணம்

In இந்தியா
Updated: 09:29 GMT, Nov 28, 2016 | Published: 09:29 GMT, Nov 28, 2016 |
0 Comments
1227
This post was written by : Elakkiya

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி ஃபிடெல் காஸ்ரோவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கியூபா செல்லவுள்ளார்.

ராஜ்நாத் சிங்குடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் நாளை புதுடெல்லியில் இருந்து ஹவானா நகருக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், புரட்சித் தலைவருமான ஃபிடெல் காஸ்ரோ நேற்று முன்தினம் தனது 90 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

அவருடைய விருப்பத்திற்கு இணங்க இறந்த சில மணிநேரங்களுக்குள் உடல் தகனம் செய்யப்பட்டது. எனினும் பொதுமக்களின் அஞ்சலிக்காக தகளம் செய்யப்பட்ட அவரது உடலின் சாம்பல் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் ஹவானா நகரில் உள்ள கல்லறையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி அடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதற்காக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழுவினர் கியூபா செல்லவுள்ளனர்.

உலகநாடுகளின் பெருந்தலைவர்களின் இறுதிச் சடங்குகளில் ஒரு நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ, வெளியுறவுத்துறை அமைச்சரோ பங்கேற்பது மரபாக உள்ளது.

எனினும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளதால், அவருக்கு பதிலாகமத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கியூபா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg