Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூறாவளி மற்றும் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனையில் பாப்பரசர்

In
Updated: 09:40 GMT, Nov 28, 2016 | Published: 09:40 GMT, Nov 28, 2016 |
0 Comments
1214
This post was written by : Sambavi

மத்திய அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி மற்றும் நிலநடுக்கம் என்பவற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாப்பரசர் பிரான்ஸிஸ் விஷேட ஆராதனையை நடாத்தியுள்ளார்.

நிஹரகுவா மற்றும் கோஸ்டாரிகா போன்ற மத்திய அமெரிக்க நாடுகளில் சூறாவளி தாக்கியதில் சுமார் 9 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

இதேவேளை, குறித்த சூறாவளியின் தாக்கும் உணரப்பட்ட இடங்களில் ஒரு இத்தாலியர் உயிரிழந்ததாகவும் ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. இந்த நிலையிலேயே பாப்பரசர் விஷேட ஆராதனையினை மேற்கொண்டுள்ளார்.

ஆராதனையில் ஈடுபட்ட புனித பாப்பரசர், ‘அன்பான சகோதர சகோதரிகளே! சூறாவளி மற்றும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இன்று பிரார்த்திப்போம். குறிப்பாக சூறாவளி மற்றும் அதனைத் தொடரந்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பவற்றிற்கு முகம்கொடுத்த நிஹரகுவா மற்றும் கோஸ்டாரிகாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்திப்போம்’ என்று கூறியுள்ளார்.

தாக்கிய வெப்பமண்டலப் புயல் காரணமாக கனமழை, கடுமையான சுழற்காற்று மற்றும் கடுமையான குளிர் போன்றன மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தNதூடு, வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களை தோற்றுவித்து மக்களை நிலைகுலையச் செய்திருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg