Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணு உலைகள் வேண்டும்: சுவிஸ்சர்லாந்து மக்கள் தீர்மானம்

In ஐரோப்பா
Updated: 10:16 GMT, Nov 28, 2016 | Published: 10:16 GMT, Nov 28, 2016 |
0 Comments
1527
This post was written by : Sambavi

அணுஉலை பாவனை தொடர்பான வாக்கெடுப்பில் சுவிஸ்சர்லாந்து மக்கள் குறித்த திட்டத்தினை ஆதரித்து வாக்களித்துள்ளனர். அதற்கமைய அணுஉலைகளை மூடவேண்டிய கட்டாயத்தில் இருந்து சுவிஸ் அரசாங்கம் விடுபட்டுள்ளது.

உயர் ஜனநாயகத் தன்மை பேணப்படும் சுவிஸ்சர்லாந்தில், முக்கிய தீர்மானங்கள் அனைத்தும் மக்கள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டே இறுதி முடிவு எட்டப்படும். இந்த நிலையில் அணு உலைகள் குறித்த வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் 54.2 சதவீத மக்கள் திட்டத்தினை ஆதரவு தெரிவித்தும் 45.7 சதவீதமானவர்கள் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.

இதன் காரணமாக அணு உலை செயற்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்து சுவிஸ் அரசாங்கம் விடுபட்டுள்ளது. குறித்த 5 அணு உலைகளும் சுவிஸ்சலாந்திற்கான மின்சக்தியில் 40 சதவீதத்தினை பூர்த்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழல் தொடர்பில் இறுக்கமான சூழ்நிலைக்கு குறித்த அணு உலைகள் இட்டுச்சென்றுள்ள நிலையில், மக்களின் முடிவு தீர்க்கமான இறுதித் தீர்மானத்தினை எட்டுவதற்கு வழி செய்துயும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இத்திட்டங்கள் நிறுத்தப்படுமானால் சுவிஸ்சர்லாந்தில் பாரிய மின்தட்டுப்பாடு ஏற்படும் என்று அந்த நாட்டு அரசாங்கம் அச்சம் தெரிவித்திருந்தது.

இவ்வாறான நிலையிலேயே சுவிஸ் மக்கள் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அணு உலைகள் வெளியேற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டின் பசுமைக்கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி ஆகியன ஜப்பானில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட ஃபியுஷிமா அணு உலை விபத்திற்கு பின்னர் குறித்த விடயத்தினை வாக்கெடுப்பிற்கு விடவேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg