Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலை வியாபாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

In இலங்கை
Updated: 13:14 GMT, Nov 28, 2016 | Published: 10:35 GMT, Nov 28, 2016 |
0 Comments
1353
This post was written by : hoshika

திருகோணமலை நகரசபைக்கு உட்பட்ட அநுராதபுரச்சந்தி பொதுச்சந்தை வியாபாரிகள் தங்களின் கடைகளை மூடி பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களின் வியாபார நிலையங்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு நகரசபையிடம் கோரிக்கை விடுத்து குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தை கட்டடத்தொகுதியை நகரசபை சீராகப் பராமரிப்பதில்லை என்பதுடன் இக்கட்டடத்தொகுயில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு கதவு  மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் காணப்படுவதாக இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களின் கோரிக்கைக்கு அமைய அடிப்படை வசதிகளை நகரசபை செய்து தராத பட்சத்தில் எங்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

trinco-protest-at-shop-owner-02 trinco-protest-at-shop-owner-03 trinco-protest-at-shop-owner

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg