Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடர் சிறப்பானதாகவே அமைந்திருந்தது: ஸ்மித் கருத்து

In கிாிக்கட்
Updated: 10:54 GMT, Nov 28, 2016 | Published: 10:49 GMT, Nov 28, 2016 |
0 Comments
1138
This post was written by : Anojkiyan

தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் சிறப்பானதாகவே அமைந்திருந்ததாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரு போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி தோல்வியை தழுவி, இறுதி பகலிரவு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று சொந்த மண்ணில் தொடரை பறிகொடுத்தது.

இந்நிலையில், இத்தொடர் குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தால் கூடுதல் மகிழ்ச்சி கிடைத்திருக்கும். இந்த தொடர் சிறப்பானதாகவே அமைந்திருந்தது. 3வது போட்டியில் உஸ்மான்கவாஜா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இனி வரும் போட்டிகளில் சாதிப்பதற்கு, இந்த வெற்றி உதவியாக அமையும். பகல்-இரவு போட்டியில், இளஞ்சிவப்பு பந்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை வீரர்கள் கற்றுக்கொண்டனர். ஆரம்பத்தில் பந்துகளை எதிர்கொள்ளும் போது சற்று தடுமாற்றம் இருக்கத்தான் செய்தது. அதை பழகிகொள்ள இன்னும் நாட்கள் தேவை. என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg