Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாணயத்தாள் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

In இந்தியா
Updated: 10:39 GMT, Nov 28, 2016 | Published: 10:39 GMT, Nov 28, 2016 |
0 Comments
1292
This post was written by : Elakkiya

மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நாணயத்தாள்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்னர் ராகுல் காந்தி மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இன்று (திங்கட்கிழமை) திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் இந்த எதிர்ப்பு போராட்டத்தில், எதிர்க்கட்சிகளான திராவிட முன்னேற்ற கழகம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் ராஷ்திரீய ஜனதா தளம் ஆகியனவும் இணைந்து கொண்டன.

இதன்போது காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவிக்கையில், ‘ மக்களுக்கு போதுமான அளவில் நாணயத்தாள்களை வழங்குவதற்கு அரசாங்கத்தால் முடியாமல் உள்ளது. நாடுமுழுவதும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு முன்னால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு இதுவே காரணமாக உள்ளது.’ என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை தி.மு.க மகளிர் அணியின் தலைவி கனிமொழி தெரிவிக்கையில், ‘நாணயத்தாள் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை நாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இது சாதாரண விவசாயிகளை தேவையில்லாமல் அபாயத்திற்கு உள்ளாக்கியுள்ளது.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg