Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாமலின் பெயரை பயன்படுத்தி மோசடி: நளின் ஜயவிக்ரமவுக்கு பிடியாணை

In இலங்கை
Published: 10:47 GMT, Nov 28, 2016 |
0 Comments
1091
This post was written by : Varshini
arrest-warrant

அம்பாறை நகரசபையின் முன்னாள் தலைவர் நளின் ஜயவிக்ரமவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு முன்னாள் விமானப்படை தளபதி ஹர்ஷ அபேவிக்ரமவிற்கு தொலைபேசியின் ஊடாக அழைப்பை ஏற்படுத்தியிருந்த நளின் ஜயவிக்ரம, தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவென அடையாளப்படுத்தியுள்ளதோடு, இடமாற்றமொன்றை இரத்துச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணை பிரிவினரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நளின் ஜயவிக்ரமவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை நளின் ஜயவிக்ரமவிற்கு எதிராக அம்பாறை சாமபுர மக்கள் இன்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg