Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதா ரவி நீக்கம்

In சினிமா
Updated: 10:59 GMT, Nov 28, 2016 | Published: 10:58 GMT, Nov 28, 2016 |
0 Comments
1322
This post was written by : Elakkiya

தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச் செயலாளர் ராதா ரவி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் சங்கத்தின் அறக்கட்டளையில் முறைகேடு இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த ராதா ரவி, ‘சரத்குமாரையும், என்னையும் நிரந்தரமாக நீக்கியிருப்பதாக தற்போதைய நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியிருக்கிறார். முதலில் இங்கு  நடந்தது பொதுக்குழுவே அல்ல. அது ஒரு விழா அவ்வளவுதான்.

நிதானமாக நடத்திய பொதுக்குழு கூட்டத்திலே தவறு செய்திருக்கிறார்கள் 3500 பேருக்கு அழைப்பு விடுத்து 800 பேர் அமரக்கூடிய அரங்கில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

நடிகர் சங்கத்திலிருந்து எங்களை நீக்குவதான முடிவு எங்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது. நடிகர் சங்க அறக்கட்டளைக்கான இடத்தைக் காணவில்லை என்கிறார்கள், முதலில் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷாலை நீக்கியிருக்கிறார்கள். கேள்வி கேட்டதால் நீக்கினார்கள் என்று கூறுகின்றனர்.

அதேபோன்று நீங்களும் கேள்வி கேட்ட பலரை நீக்கவில்லையா? இந்த நீக்க முடிவை நான் சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்திருக்கிறார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg