Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்களின் பிரச்சினை தொடர்பில் மே கண்டுகொள்ளவில்லை: சோபியா வோல்கர்

In
Updated: 11:07 GMT, Nov 28, 2016 | Published: 11:07 GMT, Nov 28, 2016 |
0 Comments
1198
This post was written by : Sambavi

பிரித்தானிய அரசியல் வரலாற்றில் இரண்டாவது பெண் பிரதமராக பதவி வகிக்கும் தெரேசா மே ஆட்சிக்கு வந்த நாள் தொடக்கம் இதுவரை பெண்கள் முகம்கொடுக்கும் எந்த பிரச்சினைகள் தொடர்பிலும் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு முகம்கொடுத்துள்ளார்.

பிரதமராக பதவி ஏற்றதில் இருந்து தற்போது வரை பிரித்தானிய பெண்கள் எதிர்நோக்கும் எந்தப் பிரச்சினை தொடர்பிலும் பிரதமர் கவனம் செலுத்தவில்லை என்று பெண்கள் சமத்துவக் கட்சித் தலைவர் சோபியா வோல்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பிரதமர் தெரேசா மேயின் இச் செயற்பாடு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மான்செஸ்டரில் தமது கட்சியின் முதலாவது வருடார்ந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது ஊதிய வெளிப்பாட்டுத் தன்மை, குழந்தைகள் நலம் மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை வெகுவாக சாடினார்.

மேலும், பிரதமர் தெரேசா மே பதவியேற்ற போது நிலவிவரும் ஊதிய சமத்துவத்தில் காட்டப்படும் பாலியல் பேதங்கள் குறித்து தாம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்திருந்த போதிம் இதுவரை அதற்கான எந்தவொரு செயற்பாடுகளையும் அவர் முன்னெடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg