Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் தீர்வை இருதரப்பும் விரும்பவில்லை: சத்தியலிங்கம்

In இலங்கை
Updated: 11:15 GMT, Nov 28, 2016 | Published: 11:15 GMT, Nov 28, 2016 |
0 Comments
1212
This post was written by : Varshini

எம்மை நாமே ஆளக்கூடிய வகையிலான அரசியல் யாப்பு ஏற்படுத்தப்படுவதை இரண்டு தரப்பிலுமுள்ள சிலர் விரும்பவில்லையென வட மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா கல்மடு கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையமொன்றை இன்று (திங்கட்கிழமை) திறந்துவைத்து உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

”தற்போதைய நிலையில் இந்த நாட்டில் நல்லதொரு நிர்வாகம் மற்றும் ஆட்சி இடம்பெற வேண்டுமென உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டு பக்கத்தில் இருந்தும் இந்த விடயங்களை குழப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டிலே எங்களை நாங்களே ஆழக்கூடிய ஒரு அரசியல் யாப்பு மாற்றம் ஏற்படுவதை இரண்டு பக்கத்திலும் சிலர் விரும்பவில்லை. காரணம், அவர்களுடைய அரசியல் பிழைப்பு அதில் தங்கியுள்ளது. அவர்கள் இந்த நாட்டிலே நடக்கின்ற நல்லாட்சிக்குரிய அல்லது சமாதானத்திற்குரிய அல்லது நாங்கள் இந்த நாட்டிலே சகஜமாக எல்லா இனங்களும் சேர்ந்து வாழக் கூடியதாக இருப்பதை விரும்பவில்லை.

அவர்கள் இதை பலவிதத்திலும் குழப்புவதற்கான  முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். முப்பதாண்டுகால யுத்தத்தில் நாம் பல விடயங்களை இழந்து நிற்கின்றோம். உயிர்கள், உடைமைகளை மாத்திரம் அல்ல எங்களது சமுதாயத்திலே கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை இழந்தவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம். நடக்கக் கூடாத பல விடயங்கள் இந்த நாட்டிலே நடந்துவிட்டன.

ஆகவே இவை மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டுமாயின் எங்களை நாங்கள் ஆழக்கூடிய, சகல இனங்களும் சமாதானமாக வாழக்கூடிய வகையில் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg