Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சந்தானத்தின் சண்டைக்காட்சியை பார்த்து அசந்துபோன படக்குழுவினர்

In சினிமா
Updated: 11:29 GMT, Nov 28, 2016 | Published: 11:28 GMT, Nov 28, 2016 |
0 Comments
1397
This post was written by : Elakkiya

சந்தானம் நடித்துவரும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ திரைப்படத்தின் அதிரடியான சண்டைக் காட்சி ஒன்றில் ‘டூப்’ போடாது சந்தானம் அசத்தியுள்ளார்.

தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பிறகு சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன்பின்னர், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட இயக்குனர் கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ‘அனேகன்’ பட நாயகி அம்ரியா தஸ்தூர் நடித்து வருகிறார்.

மேலும், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமி நாதன், ஊர்வசி, மன்சூர் அலிகான், மயில்சாமி என ஒரு நகைச்சுவை பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இப்படத்திற்காக அண்மையில் அதிரடியான ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

இந்த சண்டைக் காட்சியில் வில்லனாக நடிக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுடன் சந்தானம் மோதுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

இக்காட்சியில் டூப் இல்லாமல் மேலிருந்து கீழே தலைகீழாக தொங்கியும், மிக உயரத்திற்கு பாய்ந்தும் நடித்து அங்கிருந்தவர்களின் கைதட்டலை சந்தானம் பெற்றுள்ளாராம்.

மிக வேகமாக நடைபெற்று வரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாசன் வி{வல் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg