Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையாள திரையுலகில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்

In சினிமா
Updated: 11:41 GMT, Nov 28, 2016 | Published: 11:40 GMT, Nov 28, 2016 |
0 Comments
1111
This post was written by : Elakkiya

மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி அனைவரினதும் வரவேற்பை பெற்றதுடன் தேசிய விருதையும் வென்ற ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் குட்டிக் கதாநாயகர்களான விக்னேஷ்-ரமேஷ் இருவரும் தற்போது மலையாள படத்தில் நடித்துவருகின்றனர்.

காக்கா முட்டை படத்தில், பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை என்ற பெயரில் அண்ணன்-தம்பியாக நடித்த இருவரும் மலையாள படத்திலும் அண்ணன் தப்பியாகவே நடிக்கிறார்களாம்.

‘காக்கா முட்டை’ பாணியில் வித்தியாசமான கதையில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகியது. டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விக்னேஷ்-ரமேஷ் இருவரும் கேரளாவில் தங்கி உள்ளனர்.

இதுதவிர கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படத்தில் விக்னேஷ், ரமேஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg