Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகர் விஷாலின் அலுவலகத்தில் கல்வீசி தாக்குதல்

In சினிமா
Updated: 12:01 GMT, Nov 28, 2016 | Published: 11:58 GMT, Nov 28, 2016 |
0 Comments
1191
This post was written by : Elakkiya

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷாலின் அலுவலகத்தில் மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்ட போதிலும் மிரட்டல்கள் காரணமாக இடம்மாற்றப்பட்டது.

எனினும் அது குறித்து விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு வழங்கியதுடன் பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மாலை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இவ்வாறிருக்க விருகம்பாக்கம் குமரன் காலனி, 1 ஆவது தெருவில் உள்ள நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலின் அலுவலகத்தில் காவலுக்கு நின்றுகொண்டு காவலாளியை தாக்கிய ஐவர் கொண்ட கும்பல் அலுவலகத்தின் மீது கற்களை வீசி அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.

இதில் அலுவலக வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த காரின் பின்பக்கத்தில் இருந்த விளக்கு கண்ணாடி உடைந்தது.

இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் சங்க பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட விரோதம் காரணமாக விஷால் அலுவலகத்தில் கல்வீச்சு நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அலுவலகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்தும் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg