Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டப்படி சந்திப்பேன்: சரத்குமார்

In சினிமா
Updated: 12:08 GMT, Nov 28, 2016 | Published: 12:08 GMT, Nov 28, 2016 |
0 Comments
1216
This post was written by : Elakkiya

நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கிய விவகாரத்தை சட்டப்படி சந்திப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதால் இரசிகர்களும், தொண்டர்களும் பதற்றம் கொள்ள வேண்டாம் என்றும் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்

இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் விதிகளின் படி நடைபெற்றுள்ளதா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க அந்த கூட்டத்தின் வாயிலாக எங்களை நிரந்தரமாக நீக்கியிருக்கிறோம் என்று கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

தற்காலிக நீக்கம் செய்திருப்பதை எதிர்த்து நாங்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, நிரந்தர நீக்கம் என்று கூறுவது சட்டத்திற்கு உட்பட்டது அல்ல.

என்னை தொடர்புகொண்டு தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொண்ட இரசிகர்களுக்கும் சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி. அவர்களின் இந்த தன்னிச்சையான முடிவை சட்டத்தின் மூலம் நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண்போம்.

எனவே எனது அன்புக்கினிய இரசிகர்களும், தொண்டர்களும் எந்த ஒரு பதற்றமும் கொள்ளாமல் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg