Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிபர் நியமனம் வழங்கவேண்டுமென பதில் அதிபர்கள் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 12:20 GMT, Nov 28, 2016 | Published: 12:20 GMT, Nov 28, 2016 |
0 Comments
1291
This post was written by : hoshika

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் பதில் அதிபர்களை நிரந்தரமாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு முன்பாக கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தினால் (அதிபர்கள் இல்லாத பாடசாலைகளில் அதிபர்களாக கடமையாற்றியவர்கள் சங்கம்) நடத்தப்பட்டது.

கடந்த 30 வருட காலங்களில் நடைபெற்ற பயங்கரவாத சூழலில் பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்ட போது தரம் பெற்ற அதிபர்கள் இல்லாத நிலையில் அந்த பாடசாலைகளில் கடமையாற்றிய சிரேஸ்ட ஆசிரியர்களை கடமை நிறைவேற்று அதிபர்களாக நியமிக்கப்பட்ட போது அவர்கள் பாடசாலை சமூகத்துடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கல்வி அமைச்சரே! கடமை​ நிறைவேற்று அதிபர் விடயத்தில் நீதியுடன் செயற்படுங்கள், மனிதாபிமானமற்ற செயல்களால் எம்மை மன நோயாளி ஆக்காதே! தேவையுள்ள போது அனைப்பதும் தேவை நிறைவேறியதும் நிராகரிப்பதும் சரியா? இது போன்ற பதாதைகளை ஏந்கியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுப்டனர்.

இதில் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த 60 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg