Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸாருக்கு கொலை அச்சுறுத்தல்: வித்தியா கொலை சந்தேக நபர்கள் ஒப்புதல்

In இலங்கை
Updated: 16:19 GMT, Nov 28, 2016 | Published: 15:57 GMT, Nov 28, 2016 |
0 Comments
1687
This post was written by : hoshika

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தாம் பொலிஸாரை அச்சுறுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

குறித்த கொலை தொடர்பான வழக்கு இன்று (திங்கட்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், தம்மை கைது செய்த தமிழ் பொலிஸாரை அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் இன்று வாக்குமூலம் அளித்த போதே அவர்கள் இதனை ஒப்புக்கொண்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் தாம் வெளியில் வந்ததும் உம்மை கொலை செய்வோம் என தமிழ் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்த காணொளி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg