Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலம் புனரமைக்கப்படாததால் மக்கள் பெரும் அசௌகரியம்

In இலங்கை
Updated: 17:17 GMT, Nov 29, 2016 | Published: 16:47 GMT, Nov 28, 2016 |
0 Comments
1304
This post was written by : hoshika

மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள புளியடிமடுப் பாலமும் அதனருகே போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மதகும் முற்றாக உடைந்துள்ளதனால் அந்த வீதியால் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.

புளியடிமடுப் பாலம்  கடந்த ஒருவருடத்திற்கு முன்னரே உடைந்து விழுந்து விட்டது. அதன் பின்னர் அந்தப் பாலத்திற்கருகே தற்காலிகமாக ஒரு மதகு அமைக்கப்பட்டு அதனூடாக பயணிகள் போக்குவரத்தினை மேற்கொண்டு வந்தனர்.

எனினும், கடந்த வாரம் தொடர்ச்சியாக சில தினங்கள் பெய்த  மழை வெள்ளத்தினால் தற்போது அந்த தற்காலிக மதகும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது வாகனங்கள் செல்லமுடியாமல் இந்த வீதி தடைப்பட்டுள்ளது. இந்த பாதையை பயன்படுத்திய மக்கள் மேலதிகமாக பல மைல் தூரம் சுற்றி வளைத்து பயணம் செய்து தமது கிராமங்களை செல்ல வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.

புளியடிமடுப் பாலத்தின் வழியாக தினமும் சென்று வரும் அரச அலுவலர்கள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள்  உட்பட இன்னும் பல  மக்களும்  ​பெரும் சிரமத்தினை எதிர்​நோக்கியுள்ளனர்.

உடைந்து போயுள்ள இப்பாலத்தை உடனடியாக அமைத்துத் தருமாறு பிரதேச மக்களும், பயணிகளும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரி நிற்கின்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்போபர் மாதம் மழை வெள்ளத்தின் போது உடைந்த நிலையில் இருந்த மேற்படி பாலத்தினை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் உள்ளிட்டோர் அப்போதே அங்கு சென்று பார்வையிட்டுத் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

batticaloa-flooding-news-01 batticaloa-flooding-news-02 batticaloa-flooding-news-03 batticaloa-flooding-news-04 batticaloa-flooding-news-05

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg