Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கில் பாரபட்சமின்றி அபிவிருத்தி  நடவடிக்கைகள் என்கிறார் கிழக்கு முதல்வர்

In இலங்கை
Updated: 17:06 GMT, Nov 28, 2016 | Published: 17:06 GMT, Nov 28, 2016 |
0 Comments
1272
This post was written by : hoshika

கிழக்கு மாகாணத்தில் இன மத மற்றும் மொழி பாரபட்சமின்றி அபிவிருத்தி  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

தற்போது கிழக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியாலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சில அரசியல்வாதிகள் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஒரு தவறான தோற்றப்பாட்டை உருவாக்க முயல்வதாகவும் அவர்கள் தமது சொந்த அரசியல் இருப்புக்காக இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கிழக்கில் தற்போது மூவினத்தவர்களும் சகல கட்சிகளும் அமைச்சரவையிலும் ஆளுந்தரப்பிலும் அங்கம் வகிக்கும் ஆட்சியே முன்னெடுக்கப்படுவதாகவும் இதுவே கிழக்கு மாகாணத்தின் சமத்துவத்துக்கு சான்று பகர்வதாக அவர் தெரிவித்தார்.

எனவே கிழக்கு மாகாணத்துக்கான அபிவிருத்தித் திட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அனைவரும் இணைந்து செயற்படுவது அத்தியவசியமானது என கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg