Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களனிவெளி பெருந்தோட்ட கம்பனி விதி முறைகளை மீறியதாக குற்றச்சாட்டு

In இலங்கை
Updated: 17:25 GMT, Nov 28, 2016 | Published: 17:25 GMT, Nov 28, 2016 |
0 Comments
1389
This post was written by : hoshika

கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ள விதி முறைகளை மீறி செயல்பட்டதாக களனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் ஹட்டன் போடைஸ் தோட்ட தொழிலாளர்கள் தேயிலை தூள் பொதிகளை கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாகவும் இதன் போது மக்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒரு மாத காலம் நிறைவடைந்தும் அக்கூட்டு ஒப்பந்தத்தில் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கைச்சாத்திடப்பட்டுள்ள விதி முறைகளுக்கு அப்பால் போடைஸ் தோட்ட நிர்வாகத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக மாறுப்பட்ட தொழில் விதி முறைகள் உள்வாங்கப்பட்டுள்ளது.

“நோம்” அடிப்படையில் பறிக்கப்பட வேண்டிய கொழுந்தினை அதற்கும் அதகிமாக பறிக்கும் படி போடைஸ் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை வற்புறுத்தியுள்ளது.

அதேவேளை கூட்டு உடன்படிக்கையின் அடிப்படையில் திறன் கொடுப்பனவான 140 ரூபாவை அத்தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை.

அதேபோன்று மேலதிகமாக பறிக்கப்படும் தேயிலை கொழுந்திற்கான தொகையினையும் மறுத்திருக்கும் இத்தோட்ட நிர்வாகம் ஞாயிற்று கிழமைகளில் வழமைபோல் வழங்கப்பட்ட ஒன்றரை நாள் சம்பளத்தை தவிர்த்து கைகாசு அடிப்படையில் சம்பளத்தை வழங்க முன்வந்திருந்துள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

hatton-farm-people-news-02 hatton-farm-people-news-01 hatton-farm-people-news-03 hatton-farm-people-news-04 hatton-farm-people-news-05 hatton-farm-people-news-06 hatton-farm-people-news-07 hatton-farm-people-news-08 hatton-farm-people-news-09 hatton-farm-people-news-10

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg