Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாவீரர்களின் தியாகங்கள் ஒரு போதும் அரசியல் மயப்படுத்தக் கூடாது: மயூரன்

In இலங்கை
Published: 17:40 GMT, Nov 28, 2016 |
0 Comments
1488
This post was written by : hoshika
mayooran-vavuniya

உணர்வு ரீதியான அஞ்சலிகளே உயிர்த்தியாகங்களுக்குரிய உண்மையான அஞ்சலியாகும் எனவும் மாவீரர்களின் தியாகங்கள் ஒரு போதும் அரசியல் மயப்படுத்தக் கூடாது  எனவும்  வடமாகாண  மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் தின நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது கலந்து கொண்டு மாவீரர் தின அஞ்சலி உரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்ட மக்கள் சொந்த மாவட்டத்தில் அஞ்சலி செலுத்த ஏதுவாக படையினர் முகாமை அங்கிருந்து அகற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அத்துடன்  நல்லெண்ணம் என்பது ஏட்டுச் சுரக்காய் இல்லை எனவும் தெரிவித்தார்.

எமது மக்களின் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடி மரணித்த உறவுகள் விதைக்கப்பட்ட இடங்களிலேயே நாம் சுதந்திரமாக அஞ்சலி செய்யும் உரிமைகளை மறுக்கின்ற அரசாங்கம் எமக்கு நியாயமான, எமது தியாகங்களுக்கு ஈடான, நிரந்தர அமைதிக்கான, நிலையான, சட்டபூர்வமான அரசியல் உரிமையை வழங்குமா? என்ற சந்தேகம் இந்த நல்லாட்சி மீதும் ஏற்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கடந்தகால அரசாங்கங்களைப் போலல்லாமல், மீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்றாமல், விரக்தி நிலைக்கு கொண்டு செல்லாமல், அரசியல் தீர்வில் நம்பிக்கை வைக்க நல்லெண்ணத்தை வெளிப்படுத்த அரசு சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg