Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் வைத்தியதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

In இலங்கை
Updated: 18:19 GMT, Nov 28, 2016 | Published: 18:06 GMT, Nov 28, 2016 |
0 Comments
1362
This post was written by : hoshika

வரவு செலவுத்திட்டத்தில் சுகாதார துறைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பட்ட போராட்டம் ஒன்றை மேற்கொண்டது.

வரவு செலவுத்திட்டத்தில் இலவச சுகாதாரத்துறையினை கேள்விக்குட்படுத்தப்படும் பல்வேறு பாதகங்கள் காணப்படுவதாகவும் அவற்றினை நீக்குமாறு கோரி இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் வீடுதி பகுதியில் இருந்து ஊர்வலம் ஆரம்பமாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை நடைபெற்றதுடன் வைத்தியசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவத்தில் கை வைக்காதே, அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் கைவைக்காதே, தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே, புகையிலை நிறுவனங்களிடம் கையேந்துவதை நிறுத்து, மக்களுக்கு தண்டப்பணம், அரசியல்வாதிகளுக்கு சொத்துசுகம், எட்காவை வரவேற்கும் வரவுசெலவுத்திட்டம் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களுக்கு பாதகமாகவும் இலவச சுகாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலும் வரவுசெலவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஒரு வார காலத்திற்குள் பதில் தராதுவிட்டால் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

batticalao-news-01 batticalao-news-02 batticalao-news-03  batticalao-news-05

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg