Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க யாழில் பொதுமக்கள் குறைகேள் மையம்

In இலங்கை
Updated: 05:19 GMT, Nov 29, 2016 | Published: 02:20 GMT, Nov 29, 2016 |
0 Comments
1336
This post was written by : Varshini

பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை வழங்கும் பொருட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்.மேலதிக அரச அதிபர் தலைமையில் பொதுமக்கள் குறைகேள் மையம் நிறுவப்பட்டுள்ளது.

குறித்த மையத்தின் ஊடாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிவதோடு, கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பொறிமுறையொன்றும் வகுக்கப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை மேற்கோள் காட்டி குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், 021 2225000 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது கடிதம் மூலம் தமது குறைகளையும் கருத்துக்களையும் தெரிவிக்க முடியுமென்றும், பொதுமக்களின் கருத்துக்கள் தொடர்பான இரகசியம் பேணப்படும் என்றும் யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg