Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரபாகரனை நினைவுகூருவதில் தவறில்லை: மஹிந்த தரப்பு எம்.பி.!

In இலங்கை
Updated: 07:50 GMT, Nov 29, 2016 | Published: 03:20 GMT, Nov 29, 2016 |
0 Comments
2827
This post was written by : Varshini

இலங்கையில் இரண்டு முறை கிளர்ச்சியை ஏற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தலைவரான ரோஹண விஜேவீரவை நினைவுகூர முடியுமாயின் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிர்நீத்த தினத்தையும் அனுஷ்டிக்கலாமென்றும் அதில் எவ்வித தவறும் இல்லையென்றும் மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறே யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதும் தார்மீக கடமையென குறிப்பிட்டுள்ள வாசுதேவ நாணயக்கார, அதற்கு எவ்வகையிலும் தடைவிதிக்கக் கூடாதென குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இவர்களை நினைவுகூருகின்ற போர்வையில் ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டவர்களை நினைவுகூருவதும் தனித் தமிழீழ கோரிக்கை முன்வைக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாதென வாசுதேவ மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg