Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்களின் உணர்வுகளை சிங்கள ஊடகங்கள் மதிப்பதில்லை: நாடாளுமன்றில் டளஸ்

In இலங்கை
Updated: 03:36 GMT, Nov 29, 2016 | Published: 03:36 GMT, Nov 29, 2016 |
0 Comments
1631
This post was written by : Varshini

தமிழ் மக்களின் உணர்வுகளை சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள ஊடகங்கள் கொண்டுசெல்வதில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகத்துறை அமைச்சின் நிதியொதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நல்லிணக்கம் பற்றி அரசாங்கம் கதைத்து வந்தாலும், காலையில் சிங்கள ஊடகங்களின் பத்திரிகை கண்ணோட்டங்களை பார்த்தால் சிங்கள செய்திகள், கேலிச்சித்திரங்கள் இவற்றுடன் ஆங்கில ஊடகங்களில் வெளியாகும் தகவல்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகின்றன எனவும், தமிழ் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் மாத்திரமே தமிழ் மக்கள் தொடர்பான செய்திகள் வெளியாவதாக குறிப்பிட்ட  டளஸ், தமிழ் மக்களின் சுக துக்கங்களை வெளிப்படுத்தும் செய்திகளை சிங்கள மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் அவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg