Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலிக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

In ஐரோப்பா
Updated: 04:14 GMT, Nov 29, 2016 | Published: 04:14 GMT, Nov 29, 2016 |
0 Comments
1361
This post was written by : Sylviya

வடக்கு ஆபிரிக்காவில் இருந்து இத்தாலிக்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அண்மைய காலங்களில் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறித்த எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இத்தாலி உட்துறை அமைச்சர், “இதுவரை இத்தாலியை வந்தடைந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை தற்போது 171,000 ஆக அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இறுதியில் இத்தாலியை வந்தடைந்த மொத்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 170,100 என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தாலிக்கு வரும் பொருட்டு மத்தியதரைக்கடலில் பயணித்து வந்த குடியேற்றவாசிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐ.நா அமைப்பு, இதுவரை 4690 குடியேற்றவாசிகள் மத்தியதரைக்கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதிகரித்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையால், தற்போது இத்தாலியின் இருப்பிடம் அளிக்கும் பணிகளும் அதிகரித்து வருவதாக உள்ளூர் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அதனடிப்படையில், இத்தாலியில் உள்ள சுமார் 176,000 குடியேற்றவாசிகள் வரவேற்பு மையங்களில் இருப்பிடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg