Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் தெரிவு அமெரிக்க – கியூப உறவை பாதிக்காது : வெள்ளை மாளிகை தெரிவிப்பு

In உலகம்
Updated: 04:22 GMT, Nov 29, 2016 | Published: 04:22 GMT, Nov 29, 2016 |
0 Comments
1308
This post was written by : Anojkiyan

கியூபாவின் புரட்சியாளரும், நீண்ட காலம் பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதியுமான ஃபிடெல் காஸ்ரோவின் மறைவினால், அமெரிக்கா இடையேயான உறவை பலப்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அதேவேளை, தற்போது அமைந்திருக்கும் டொனால்ட் ட்ரம்ப்  தலைமையிலான நிர்வாகம் இருநாடுகளுக்கிடையிலான அண்மைக்கால சமரசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோசப் எர்னெஸ்ட் நம்பிக்கை வெளியிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், இருநாடுகளிடையேயான உறவு கேள்விக் குறியாகிவிடும் என அஞ்சப்பட்ட நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்கா கியூபா இடையே அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருந்த பகையை, அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஒபாமா தனது இறுதி கால பதவியின் போது தணித்திருந்தார்.  இதன்பின் இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

தனது 90வது வயதில் காலமான ஃபிடெல் காஸ்ரோவின் மறைவுக்கு கியூபாவில் 9 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வடகொரியா ஆகிய நாடுகளிலும் துக்கம் கடைபிடிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg