Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கணினி வியாபாரத்தை கைமாற்றும் சம்சுங் நிறுவனம்

In தொழில்நுட்பம்
Updated: 04:19 GMT, Nov 29, 2016 | Published: 04:19 GMT, Nov 29, 2016 |
0 Comments
1248
This post was written by : Shailu

மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக் திகழும் சம்சுங் நிறுவனம், கடந்த சில காலங்களாக தமது உற்பத்தில் பாரிய பின்னடைவை சந்தித்தது.

அதாவது, தன்னுடைய உற்பத்தியான samsung note 7  கைபேசிகள் வெடித்து சிதற ஆரம்பித்தன. எனவே குறித்த கைப்பேசிகளுக்கு சில நாடுகளில் பாவனை தடையும் பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து சம்சுங் நிறுவனத்தின் கணினி வியாபாரமும் பல நிறுவனங்களின் தொழில் போட்டியால் சமீபகாலமாக கடும் சரிவை சந்தித்து வருகிறது.

எதிர்ப்பார்த்த இலாபம் வராததால் தனது கணிணி வணிகத்தை இன்னொரு மின்னணு நிறுவனமான லெனோவாவிடம் விற்க சம்சுங் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்கள் வெளியாகியுள்ளது.

சம்சுங்-ஐ விட கணினி உற்பத்தி மற்றும் வணிகத்தில் முன்னணியில் இருக்கும் லெனோவா நிறுவனத்திடம் நல்ல லாபகரமான விலைக்கு தங்கள் கணினி வணிகத்தை விற்கும் முயற்சியில் தற்போது சம்சுங் நிறுவனம் ஈடுப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் சாம்சங் நிறுவனம் தனது பிரிண்டர் வணிகத்தை HP மின்னணு நிறுவனத்திடம் விற்றது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg