Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அயர்லாந்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு

In ஐரோப்பா
Updated: 05:23 GMT, Nov 29, 2016 | Published: 05:23 GMT, Nov 29, 2016 |
0 Comments
1461
This post was written by : Sylviya

ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என தீர்மானிக்கப்பட்டமையின் பின்னர் இவ்வருடத்தில் மாத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ள அயர்லாந்து கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை தற்போது அண்ணளவாக 700,00 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அயர்லாந்து குடியரசின் கடவுச்சீட்டு அலுவலகம், “இவ்வருடத்துக்குள் வழங்கப்பட்டுள்ள அயர்லாந்து கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை அண்ணளவாக 700,000. கடந்த வருடம் 670,000 கடவுச்சீட்டுக்களே வழங்கப்பட்டன. இது ஒரு புதிய சாதனை என்று தான் கூற வேண்டும்” என தெரிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என கடந்த ஜூன் மாதம் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அயர்லாந்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின்னரும், அயர்லாந்து கடவுச்சீட்டு வைத்திருப்பவர் ஒருவருக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தடையின்றி பயணிக்க முடியும் என்பதாலேயே குறித்த கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg