Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் மோதல்: இந்திய வீரர்கள் மூவருக்கு காயம்

In இந்தியா
Updated: 04:41 GMT, Nov 29, 2016 | Published: 04:41 GMT, Nov 29, 2016 |
0 Comments
1208
This post was written by : Sambavi

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதி வழியாக இன்று (செவ்வாய்கிழமை) இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஷ்மீரின் சாம்பா மாவட்டத்தில் உள்ள இந்திய – பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக இன்று அதிகாலை சில பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர்.

இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்துள்ளனர்.

அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டபடி முன்னேறிச் சென்றுள்ளனர். இதனால் இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் காயமடைந்ததாகவும், தொடர்ந்து அப்பகுதியில் இருதரப்பிற்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg