Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹிலரியை மீண்டும் சீண்ட டிரம்ப் திட்டம்?

In உலகம்
Updated: 05:58 GMT, Nov 29, 2016 | Published: 05:58 GMT, Nov 29, 2016 |
0 Comments
1209
This post was written by : Anojkiyan

ஹிலரி கிளிண்டனின் அறக்கட்டளை மூலமாக பெறப்பட்ட நிதியுதவிகள் மீது விசாரணை நடத்த அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து அறக்கட்டளை மூலமாக ஹிலரிக்கு முறைக்கேடாக நிதி வந்துள்ளதா? இல்லையா? என அந்நாடுகளின் அரசு விசாரணை நடத்த வேண்டும் என டொனால்ட் டிரம்ப் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக, ஹைதி, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மில்லியன் கணக்கில் ஹிலரியின் அறக்கட்டளைக்கு நிதியுதவி கிடைத்துள்ளதால் இவற்றை அனைத்தையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் எண்ணியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் வெற்றி பெற்றால் ஹிலரி கிளிண்டனின் மின்னஞ்சல் விவகாரம் தொடர்பாக அவரை சிறையில் அடைப்பேன் என ஆவேசமான கூறிய டிரம்ப் தேர்தலின் வெற்றியின் பின், ஹிலரி மீது வழக்கு பதிவு செய்யும் எண்ணம் இல்லை என தெரிவித்திருந்த நிலையில், குறித்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg