Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானை வைட்வோஷ் செய்தது நியூஸிலாந்து

In கிாிக்கட்
Updated: 06:04 GMT, Nov 29, 2016 | Published: 05:55 GMT, Nov 29, 2016 |
0 Comments
1335
This post was written by : Elakkiya
255772

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 138 ஓட்டங்களால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து தொடரை 2:0 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.

ஹமில்டனில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 83.4 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணியின் சார்பில், ஜீட் ராவல் 55 ஓட்டங்களையும் வாட்லிங் 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் சொஹைல் கான் 4 விக்கெட்களையும் இம்ரான் கான் 3 விக்கெட்களையும் கைப்பற்றிக் கொள்ள மொஹமட் அமீர் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 67 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 216 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணியின் சார்பில் பாபர் அசாம் 90 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் சௌதீ 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 55 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்த நியூஸிலாந்து தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 313 ஓட்டங்;களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

துடுப்பாட்டத்தில் டெய்லர் 102 ஓட்டங்களையும் லாதம் 80 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதன்காரணமாக 369 என்ற வெற்றி இலக்குடன் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 92.1 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 230 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள 138 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக நியூஸிலாந்து அணி வீரர் சௌதீ தெரிவானார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg