Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதவியைவிட்டு விலக தயார்: தென்கொரிய ஜனாதிபதி பார்க் ஹியூன் அறிவிப்பு

In
Updated: 10:45 GMT, Nov 29, 2016 | Published: 10:40 GMT, Nov 29, 2016 |
0 Comments
1311
This post was written by : Anojkiyan

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள தென்கொரிய ஜனாதிபதி பார்க் ஹியூன் – ஹை, சட்டப்படி ஒரு நிலையை நாடாளுமன்றம் எடுத்தால் ஜனாதிபதி பதவியைவிட்டு விலகவும், ஆட்சி அதிகாரத்தை நாடாளுமன்றத்தால் அடையாளம் காட்டப்படும் நபரிடம் ஒப்படைக்கவும் நான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்கிழமை) தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடையே உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

சட்டப்படி ஒரு நிலையை நாடாளுமன்றம் எடுத்தால் ஜனாதிபதி பதவியைவிட்டு விலகவும், ஆட்சி அதிகாரத்தை நாடாளுமன்றத்தால் அடையாளம் காட்டப்படும் நபரிடம் ஒப்படைக்கவும் நான் தயாராக இருக்கிறேன். தற்போது, நாட்டில் நிலவும் அமைதியின்மையையும், இறுக்கமான சூழ்நிலையை போக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும். என குறிப்பிட்டார்.

தென்கொரிய ஜனாதிபதி பார்க் ஹியூன் – ஹை தலைமையிலான அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. ஜனாதிபதியின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg