Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Oppo A57 வகை புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் Oppo

In தொழில்நுட்பம்
Updated: 06:14 GMT, Nov 29, 2016 | Published: 06:13 GMT, Nov 29, 2016 |
0 Comments
1258
This post was written by : Shailu

Oppo எனும் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

கமெராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கைப்பேசிகளை வடிவமைக்கும் Oppo நிறுவனம், தற்போது 13 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெராவைக் கொண்ட Oppo A57 எனும் கைப்பேசியை அறிமுகம் செய்யவுள்ளது.

5.2 அங்குல அளவு, 720 x 1280 Pixel Resolution  உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் 1.4GHz வேகத்தில் செயற்படக்கூடிய Snapdragon 435 Processor,  பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB  சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 128GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

தவிர 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2,900 mAh மின்கலம் என்பனவும் காணப்படுகின்றன.

இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி விற்பனைக்கு வரவுள்ள இக் கைப்பேசியின் விலையானது 231 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg