Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன் சூப்பர் லீக்: கேரளா, கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:07 GMT, Nov 29, 2016 | Published: 06:06 GMT, Nov 29, 2016 |
0 Comments
1228
This post was written by : Elakkiya

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் அத்லெடிகோ கொல்கத்தா மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் உள்ளூர் இரசிகர்களின் ஆதரவுடன் கொல்கத்தா அணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுவரையான லீக் போட்டிகளை பொறுத்தவரையில் கொல்கத்தா அணி நான்கு போட்டிகளில் வெற்றி, ஆறு போட்டிகளில் சமநிலை மற்றும் இரண்டு போட்டிகளில் தோல்வி என 18 புள்ளிகளையும் கேரளா அணி ஐந்து போட்டிகளில் வெற்றி, மூன்று போட்டிகளில் சமநிலை மற்றும் நான்கு போட்டிகளில் தோல்வி என 18 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

இரு அணிகளும் 18 புள்ளிகளுடன் உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும்.

கொல்கத்தா அணி ஏற்கனவே 1-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியுள்ளது என்பதுடன் சொந்த மண்ணில் விளையாடுவதால் நம்பிக்கையுடன் உள்ளது. 5 ஆவது வெற்றியை பெற்று அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg