Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிறேஸில் கால்பந்து அணி வீரர்கள் பயணித்த விமானம் விபத்து

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:55 GMT, Nov 29, 2016 | Published: 06:26 GMT, Nov 29, 2016 |
0 Comments
1425
This post was written by : Elakkiya

பிறேஸில் கால்பந்து அணி வீரர்கள் பயணித்த விமானம் கொலம்பியா மெடெலின் நகரில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

72 பேருடன் பொலிவியாவிலிருந்து சென்ற தனியுரிமை பெற்ற குறித்த விமானத்தில் Chapocoense  கால்பந்து  கழக  அணி வீரர்களும் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் பயணித்தவர்கள் உயிருடன் இல்லை என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விபத்து குறித்து தெளிவான விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.

தென் அமெரிக்க அணிகளுக்கிடையிலான கால்பந்து கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில்  அத்லெடிகோ நசியோனல் அணியுடன் விளையாடுவதற்காக Chapocoense கால்பந்து அணி வீரர்களும் சென்றிருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இறுதிப்போட்டி தற்காலிகமான இடைநிறுத்தப்படடுள்ளது.

இது குறித்து மெடெலின் மேயர் கருத்து தெரிவிக்கையில், ‘ இது ஒரு துயரமான சம்பவம். இந்த விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் இருப்பதற்கு சாத்தியம் உண்டு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg