Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய சுதந்திரக் கட்சியின் தலைவராக போல் நடால் தெரிவு

In
Updated: 06:52 GMT, Nov 29, 2016 | Published: 06:36 GMT, Nov 29, 2016 |
0 Comments
1308
This post was written by : Sylviya

பிரித்தானிய சுதந்திரக் கட்சியின் தலைவராக போல் நடால்  (Paul Nuttall) தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றின் உறுப்பினரான இவர் 39 வயது மதிக்கத்தக்கவர் எனவும், சுமார் ஆறு வருடங்கள் UKIP கட்சியின் துணைத் தலைவராக கடமையாற்றியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UKIP  கட்சியின் தலைமைப் பதவியை வகிக்கும் பொருட்டு சுமார் 62.6 சதவீதமான கட்சி உறுப்பினர்கள் நட்டாலுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவை உன்னதமான நிலைக்கு மீண்டும் கொண்டு செல்வதாகவும், பிரெக்சிற் நடைமுறைகளை சரியான முறையில் முன்னெடுப்பதாகவும் நட்டால் தெரிவித்துள்ளார்.

UKIP கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பொருட்டு இவ்வாண்டில் நடத்தப்பட்ட இரண்டாவது தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg